தாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று


தாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 May 2021 11:21 PM IST (Updated: 1 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

தாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஆலங்குடி,மே.2-
ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நீலகண்டன் தலைமையில் மருத்துவக்குழுவினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பொன்மலர் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் தாசில்தார் பொன்மலர், வட்ட வழங்கல் அலுவலர் பரணி, மண்டல துணைத் தாசில்தார் நாகநாதன், தேர்தல் தற்காலிக உதவியாளர் அர்ச்சுணன் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாசில்தார் அலுவலகப்பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தாலுகா அலுவலகம் வந்து சென்ற பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தாலுகா அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



Next Story