மாவட்ட செய்திகள்

200 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுகாதார மையம் மற்றும் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகியவை இணைந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு இரண்டாம் தவணை கோவிட் -19 தடுப்பூசி போடும் முகாம் பல்கலைக்கழக சுகாதார மையத்தில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் 200 பேர் கோவிட் -19 இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்..
இதில் புதுவயல் வட்டார மருத்துவ அலுவலர் பிரியங்கா, பிருந்தா, சுஜிர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வரத்தினம் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக டாக்டர் ஆனந்தி முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை என்பது அடிப்படை ஆதாரமற்றது-மத்திய அரசு
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2. நாடு முழுவதும் தட்டுப்பாடு எதிரொலி; 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் சிக்கல்; தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் போதிய அளவுக்கு கையிருப்பு இல்லை என்று அறிவிப்பு
நாடு முழுவதும் தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கையிருப்பு இல்லை என்று அறிவித்துள்ளன.
3. ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8,500 கொரோனா தடுப்பூசி- கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசி வரப்பெற்று உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
4. சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19,100 கொரோனா தடுப்பூசி மருந்துகள்
சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19,100 கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன
5. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் அரியானா முதல்மந்திரி
அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்.