விராலிமலை அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபட கதவில் துவாரம் அமைப்பு


விராலிமலை அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபட கதவில் துவாரம் அமைப்பு
x
தினத்தந்தி 1 May 2021 6:29 PM GMT (Updated: 1 May 2021 6:29 PM GMT)

விராலிமலை அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபட கதவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.

விராலிமலை, மே.2-
விராலிமலை  மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கோவில்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோவிலில் பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதிவழங்கப்பட்டது. இந்த நிலையில் மெய்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்காக கோவிலின் முன்பக்க கதவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா செய்துள்ளார். மேலும் பாதுகாப்பு கருதி துவாரத்தில் இரும்புக் கம்பிகள் கொண்டு ஜன்னல் வடிவில் அடைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் துவாரம் வழியே அம்மனை கண்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story