வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணி


வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணி
x
தினத்தந்தி 2 May 2021 1:49 AM IST (Updated: 2 May 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ேபாலீசார் உள்பட 477 பேர் ஈடுபடுகின்றனர்.

பெரம்பலூர்:

பாதுகாப்பு பணி
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையையொட்டி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (சைபர் கிரைம்) சுப்ரமணி தலைமையில் 59 போலீசாரும், 6 போக்குவரத்து போலீசாரும், 42 ஆயுதப்படை போலீசாரும், 55 சிறப்பு போலீஸ் படையினரும், 32 ராணுவ வீரர்களும், 40 ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 234 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையில் 63 போலீசாரும், 7 போக்குவரத்து போலீசாரும், 46 ஆயுதப்படை போலீசாரும், 55 சிறப்பு போலீஸ் படையினரும், 32 ராணுவ வீரர்களும், 40 ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 243 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதன்படி 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 477 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்டம் முழுவதும்...
மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் தலா இரண்டு வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் பணியில் ஈடுபடவுள்ளனர். மாவட்டம் முழுவதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 63 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 96 தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 8 அதிவிரைவு படை, 6 அதிரடி படை, 7 ரோந்து வாகனங்கள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

Next Story