நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
x
தினத்தந்தி 1 May 2021 9:37 PM GMT (Updated: 1 May 2021 9:37 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

பவானிசாகர்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. 
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து கடந்த ஓரிரு மாதங்களாக மிகவும் குறைந்து வருகிறது. அதே சமயம் கடந்த மாதம் இறுதிவரை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறையத் தொடங்கியது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 
குறைந்தது
அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு 88.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 219 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6 மணிக்கு  நீர்மட்டம் 88.19 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 148 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது.
 அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 600 கனஅடியும், குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Next Story