கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு பாஸ்போர்ட் அலுவலகம் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்பட்டது.
ஈரோடு
ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் பின்புறத்தில் ஈரோடு பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும்.
இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு பாஸ்போர்ட் அலுவலகம் வருகிற 14-ந்தேதி வரை மூடப்படுகிறது. மேலும், மூடப்பட்டுள்ள நாட்களில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு வேறொரு தேதியில் நேர்முக தேர்வு நடைபெறும். மேலும், விவரங்களுக்கு www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story