மோகனூர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 4 பேர் கைது
மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோகனூர்:
மே தினம், சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே மோகனூர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மோகனூர் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது, மோகனூர் காவிரி ஆற்றங்கரை சுடுகாடு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்வகுமார், மேலப்பேட்டபாளையம் காவிரி ஆற்றின் அருகே மது விற்றுக்கொண்டிருந்த முருகானந்தம், வள்ளியம்மன் கோவில் அருகே மது விற்ற பிரகாஷ் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 231 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story