ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.
இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 384 பேரில், 1 லட்சத்து 62 ஆயிரத்து 319 பேர் வாக்களித்தனர். இது 72.34 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
ஸ்ரீைவகுண்டம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.சண்முகநாதன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் செ.ஊர்வசி அமிர்தராஜ், அ.ம.மு.க. சார்பில் எஸ்.ஏரல் ரமேஷ், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் பே.சுப்பையா பாண்டியன் உள்பட 21 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 76 ஆயிரத்து 843 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் 59 ஆயிரத்து 471 வாக்குகள் பெற்றார்.
வாக்கு விவரம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. செ.ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்)- 76, 843
2. எஸ்.பி.சண்முகநாதன் (அ.தி.மு.க.)- 59,471
3. பே.சுப்பையா பாண்டியன் (நாம் தமிழர் கட்சி)- 12,706
4. எஸ்.ஏரல் ரமேஷ் (அ.ம.மு.க.)- 10,203
5. ஆர்.சந்திரசேகர் (மக்கள் நீதி மய்யம்)- 1,355
6. ஜெ.துரைசிங் (சுயே)- 494
7. பா.அருண் (புதிய தமிழகம்)- 444
8. க.இசக்கிராஜா (சுயே)- 341
9. 16. ச.சேதுராமலிங்கம் (சுயே)- 312
10. ஐ.பொன்னுதுரை (சுயே)- 297
11. சு.சுரேஷ் பெருமாள் (நாம் இந்தியர் பார்ட்டி)- 233
12. பெ.சுடலைமுத்து பெருமாள் (சுயே)- 140
13. ஜோசப் லியோன் (சுயே)- 131
14. ம.சங்கர சுப்பிரமணியன் (சுயே)- 129
15. பீ.ஜெகன் (அண்ணா திராவிடர் கழகம்)- 106
16. ரா.கிருஷ்ணவேல் (சுயே)- 103
17. அருள்மதி ஏசுவடியான் (அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்)- 96
18. ஜி.சரவணன் (சுயே)- 80
19. ரா.மலையாண்டி (சுயே)- 56
20.10. பா.ஆல்வின் துரைசிங் (சுயே)- 52
21. எஸ்.வின்ஸ்டன் அண்டோ (சுயே)- 38
22. நோட்டா- 756.
Related Tags :
Next Story