மாவட்ட செய்திகள்

அமைச்சர் கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றார்: பாலக்கோடு தொகுதியை 5-வது முறையாக கைப்பற்றிய அ.தி.மு.க. + "||" + Minister KP Anpalagan wins: AIADMK wins Balakod constituency for 5th time

அமைச்சர் கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றார்: பாலக்கோடு தொகுதியை 5-வது முறையாக கைப்பற்றிய அ.தி.மு.க.

அமைச்சர் கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றார்: பாலக்கோடு தொகுதியை 5-வது முறையாக கைப்பற்றிய அ.தி.மு.க.
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியை 5-வது முறையாக அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டசபைக்கு செல்கிறார்.
தர்மபுரி:
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியை 5-வது முறையாக அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டசபைக்கு செல்கிறார்.
அ.தி.மு.க. கைப்பற்றியது
தமிழக சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகனும், இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் பி.கே.முருகனும் களம் இறங்கினர்.
பாலக்கோடு பகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதற்கு பிறகு 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து 4 முறை அ.தி.மு.க. சார்பில் கே.பி.அன்பழகன் போட்டியிட்டு 28,100 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 5-வது முறையாக இந்த தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றி கே.பி.அன்பழகன் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுகள் விவரம்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள்-2,36,825
பதிவான ஓட்டுகள்-2,06,595
கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.) -1,10,070
பி.கே.முருகன் (தி.மு.க.) -81,970
ஜி.கலைச்செல்வி (நாம் தமிழர் கட்சி) -7,704
பி.விஜயசங்கர் (தே.மு.தி.க.) -2,409
டி.ராஜசேகர் (மக்கள் நீதி மய்யம்) -1,176
ஆர்.ஹரி (பகுஜன் சமாஜ் கட்சி) -585
எம்.வடிவேல் (சுயே) -465
டி.ராஜ்குமார் (சுயே) -406
கே.ஜி.முருகன் (சுயே) -169
கே.முருகன் (சுயே) -120
எம்.பி.சரவணன் (சுயே) -90
டி.அன்பரசு (சுயே) -80
நோட்டா ஓட்டுகள்-1,351
இந்த தொகுதியில் பெறப்பட்ட தபால் ஓட்டுகளில் 342 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கை முடிவில், அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.