பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெற்றி


பண்ருட்டி தொகுதியில்  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 2:43 AM IST (Updated: 3 May 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

வேல்முருகன் வெற்றி

கடலூர், 
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன், தி.மு.க. சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயிலானி, நாம் தமிழர் கட்சி சார்பில் சுபாஷினி உள்பட 16 பேர் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பண்ருட்டி அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 92,373 வாக்குகள் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், 87,628 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 4745 வாக்குகள் வித்தியாசத்தில் வேல்முருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வெற்றி பெற்ற வேல்முருகனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதனிடம் சான்றிதழ் வழங்கினார். 
இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,45,451
பதிவான வாக்குகள்-1,95,398
வாக்கு சதவீதம் -79.61

Next Story