மாவட்ட செய்திகள்

காட்டுமன்னார்கோவில் தொகுதியைஅ.தி.மு.க.விடம் இருந்து கைப்பற்றியது விடுதலை சிறுத்தைகள் கட்சி + "||" + Captured from the AIADMK by the Liberation Tigers of Tamil Eelam

காட்டுமன்னார்கோவில் தொகுதியைஅ.தி.மு.க.விடம் இருந்து கைப்பற்றியது விடுதலை சிறுத்தைகள் கட்சி

காட்டுமன்னார்கோவில் தொகுதியைஅ.தி.மு.க.விடம் இருந்து கைப்பற்றியது விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி
காட்டுமன்னார்கோவில், 
காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் அ.தி.மு.க.வில் முருகுமாறன், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைசெல்வன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாராயணமூர்த்தி, மக்கள் நீதிமய்யம் தங்க விக்ரம், நாம்தமிழர் கட்சி நிவேதா மற்றும் இதர கட்சிகள், சுயேச்சைகள் 8 பேர் என்று மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பதிவான வாக்குள், சி.முட்லூர் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து நேற்று எண்ணப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வன்  86056 (தபால் ஓட்டுக்கள் சேர்த்து) வாக்குகள் பெற்று பெற்றார். 
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில்அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறனை விட 10565 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர் சிந்தனை செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி சான்றிதழ் வழங்கினார். 
தபால் ஓட்டுகளில் மொத்தம 2142 வாக்குள். இதில் அ.தி.மு.க.வுக்கு 883 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1070 வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று முருகுமாறன் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். இந்த நிலையில் 3-வது முறையாக அவர் தேர்தல் களம் கண்ட நிலையில், தோல்வியை தழுவி உள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க. வசம் இருந்த தொகுதியை தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி கைபற்றி உள்ளது. 
இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்                  -228956
பதிவான வாக்குகுள்               - 175657
வாக்கு சதவீதம்                     -76.10
செல்லாதவை - 96
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் 
சிந்தனைச் செல்வன்(வி.சி.க.) -86056
முருகுமாறன்  (அ.தி.மு.க.) - 75491
நாராயணமூர்த்தி (அ.ம.மு.க.) -1094
தங்க விக்ரம் (மக்கள் நீதிமய்யம்)-1415
நிவேதா( நாம்தமிழர் கட்சி) -6806
நோட்டா - 648