கடையநல்லூர் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது


கடையநல்லூர் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 2 May 2021 11:09 PM GMT (Updated: 2 May 2021 11:09 PM GMT)

கடையநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணமுரளி வெற்றி பெற்று, தொகுதியை கைப்பற்றினார்.

கடையநல்லூர், மே:
கடையநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணமுரளி 24 ஆயிரத்து 349 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் 2 லட்சத்து 89 ஆயிரத்து 940 பேரில், 2 லட்சத்து 5 ஆயிரத்து 990 பேர் தேர்தலில் வாக்களித்தனர். 
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சி.கிருஷ்ணமுரளி, தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், அ.ம.மு.க. சார்பில் எஸ்.அய்யாத்துரை பாண்டியன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.அம்பிகாதேவி, நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.முத்துலட்சுமி உள்பட 21 பேர் போட்டியிட்டனர்.

நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணமுரளி முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் அவர் 88 ஆயிரத்து 474 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கரை விட கூடுதலாக 24 ஆயிரத்து 349 வாக்குகள் பெற்றார். முகம்மது அபுபக்கருக்கு 64 ஆயிரத்து 125 வாக்குகள் கிடைத்தன.

வாக்குகள் விவரம்

கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. சி.கிருஷ்ணமுரளி (அ.தி.மு.க.) - 88,474
2. கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 64,125
3. எஸ்.அய்யாத்துரை பாண்டியன் (அ.ம.மு.க.) - 34,216
4. எம்.முத்துலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 10,136
5. எம்.அம்பிகாதேவி (மக்கள் நீதி மய்யம்) - 1,778
6. எஸ்.சீனிவாசன் (சுயே.) - 938
7. ஜி.வேலம்மாள் (சுயே.) - 672
8. ஆர்.சிவசுப்பிரமணியன் (சுயே.) - 672
9. ஆர்.பூலோகராஜ் (சுயே.) - 658
10. எஸ்.முருகானந்தம் (சுயே.) - 532
11. ஏ.சங்கர் (சுயே.) - 413
12. எஸ்.ராஜாராம் (புதிய தலைமுறை மக்கள் கட்சி) - 318
13. எம்.அய்யாத்துரை (சுயே.) - 284
14. ஆர்.ராஜா பொன்னுச்சாமி (சுயே.) - 259
15. பி.ராஜி (சுயே.) - 247
16. ஆர்.கிருஷ்ணன் (சுயே.) - 126
17. ஏ.கணேசன் (சுயே.) - 122
18. கே.மாரி துரைப்பாண்டியன் (சுயே.) - 96
19. ஆர்.அய்யாத்துரை (சுயே.) - 87
20. கே.ராதாகிருஷ்ணன் (சுயே.) - 85 
21. டி.ஆவணிராஜா (சுயே.) - 80
22. நோட்டா - 1,056

Next Story