காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2021 5:14 AM IST (Updated: 3 May 2021 5:14 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரி கரையில் உள்ள அண்ணா என்ஜினீயரிங் உறுப்பு கல்லூரியில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த பணியில் நகராட்சி ஊழியர்கள், தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் நகராட்சி ஊழியர் குமரவேல் (வயது 40) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story