மாவட்ட செய்திகள்

அந்தியூர் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது + "||" + anthiyur constituency

அந்தியூர் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது

அந்தியூர் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது
அந்தியூர் சட்டமன்ற தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது.
ஈரோடு
அந்தியூர் சட்டமன்ற தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது.
குறைந்த வாக்கு வித்தியாசம்
அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஏ.ஜி.வெங்கடாசலம் போட்டியிட்டார். அவர் மொத்தம் 79 ஆயிரத்து 96 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் 1,058 வாக்குகள் தபால் ஓட்டுகளாகும். இவரது வெற்றியின் மூலம் அந்தியூர் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது.
 1996-ம் ஆண்டு தேர்தலில் அந்தியூர்     செல்வராஜ் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். அதற்கு பின்னர் தொகுதி மறு  சீரமைப்பின்போது அந்தியூர்  தொகுதி தனி தொகுதியில் இருந்து பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்தியூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.ஜி.வெங்கடாசலம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த தேர்தலில் மீண்டும் தி.மு.க. சார்பில் களம் இறங்கினார். வாக்கு எண்ணிக்கையின்போது தொடர் முன்னிலையில் இருந்தாலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே இவரால் அந்தியூர் தொகுதியை கைப்பற்ற முடிந்தது.
வாக்குகள்
இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஏ.எஸ்.சண்முகவேல் போட்டியிட்டார். அவர் 347 தபால் ஓட்டுகள் உள்பட 77 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். 
ஏ.ஜி.வெங்கடாசலம் இவரை எதிர்த்து போட்டியிட்ட சண்முகவேலை விட 1,275 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அந்தியூர் தொகுதியை அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. கைப்பற்றியது.
தி.மு.க., அ.தி.மு.க. தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
அந்தியூர் தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
சரவணன் (நாம் தமிழர் கட்சி) - 8,230
எம்.குருநாதன் (மக்கள் நீதி மய்யம்) - 2,474
பிரதாபன் (அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி) - 2,045
எஸ்.ஆர்.செல்வம் (அ.ம.மு.க.) - 1,212
பாட்டன் (பகுஜன் சமாஜ் கட்சி) - 957
கே.ராஜேந்திரன் (இந்திய கண சங்கம் கட்சி) - 229
பூரணசந்திரன் (சுயே) - 567
தங்கவேல் (சுயே) - 543
கே.சண்முகம் (சுயே) - 503
முத்துசாமி (சுயே) - 428
குமாரசாமி (சுயே) - 225
அன்பழகன் (சுயே) - 199
எம்.ஆர்.செங்குட்டுவன் (சுயே) - 184
எம்.கீதா (சுயே) - 152
பெரியசாமி (சுயே) - 147
கார்த்திகேயன் (சுயே) - 132
ஷேக்தாவூத் (சுயே) - 111
எம்.பாக்கியம் (இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி) - 103
நோட்டா - 1,027