மாவட்ட செய்திகள்

9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார். + "||" + gobi constituency

9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.

9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.
9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.
ஈரோடு
9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.
19 பேர் போட்டி
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் கோபிசெட்டிபாளையம் தொகுதி அமைச்சர் தொகுதி என்பதால் அதிக வேட்பாளர்கள் களம் கண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் கே.ஏ.செங்கோட்டையன், தி.மு.க. சார்பில் ஜி.வி.மணிமாறன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பி.பழனிசாமி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் கு.சக்திவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நா.க.துளசிமணி, மக்கள் நீதி மையம் சார்பில் கே.என்பிரகாஷ், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 11 பேர் என மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.
82.52 சதவீத வாக்குகள் பதிவு
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 273 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 57 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 6 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 336 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 787 பேரும், பெண் வாக்காளர்கள் 1லட்சத்து 6 ஆயிரத்து 744 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 533 பேர் வாக்களித்தனர். 82.52 சதவீத வாக்குகள் பதிவாகின.
9-வது முறையாக எம்.எல்.ஏ.
இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின.
மொத்தம் 25 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டன. 6 மற்றும் 8 ஆகிய சுற்றுகளை தவிர மற்ற அனைத்து சுற்றிலும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை பெற்றார். முடிவில் கே.ஏ.செங்கோட்டையன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மணிமாறணை விட 28 ஆயிரத்து 477 வாக்குகள் முன்னிலை பெற்று 9-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். இவர் சத்தியமங்கலம் தொகுதியில் ஒரு முறையும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றி சான்றிதழ்
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:- 
1.கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.) -107999
2.ஜி.வி.மணிமாறன் (தி.மு.க.) -79522
3.பி.பழனிச்சாமி (பகுஜன் சமாஜ் கட்சி) -1031
4.கு.சக்திவேல் (இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி) -414
5.மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 11617
6.நா.க.துளசிமணி (அ.ம.மு.க.) -2668
7.என்.கே.பிரகாஷ் (மக்கள் நீதி மய்யம்) - 4250
8.த.குமார் (சுயே.) -130
9.கு.அ.சங்கர்குமார் (சுயே.) -157
10.எஸ்.செல்வக்குமார் (சுயே.) -76
11.கே.தனபால் (சுயே.) -311
12.நா.தேவராஜா (சுயே.) -307
13.மா.பழனிசாமிராஜ் (சுயே.) -427
14.ஏ.என்.பூபதிராஜா (சுயே.) -416
15.பா.முத்துமணி (சுயே.) -295
16.கே.மோகன்ராஜ் (சுயே.) -786
17.ர.ராக்கிமுத்து ரங்கநாடார் (சுயே.) -610
18.மு.ஜுனாயத் (சுயே.) -178
19.ஆர்.ஸ்ரீதேவி (சுயே.) -475
20. நோட்டா - 1297.
தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.மணிமாறனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தேவி வெற்றி சான்றிதழை வழங்கினார்.