மாவட்ட செய்திகள்

ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைத்தது + "||" + Attur and Kengavalli constituencies were re-elected by the AIADMK. Retained

ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைத்தது

ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைத்தது
ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைத்தது
ஆத்தூர்:
ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய தொகுதிகளை மீண்டும் அ.தி.மு.க. தக்க வைத்துக்கொண்டது.
ஆத்தூர்
ஆத்தூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஜெய்சங்கரன், தி.மு.க. சார்பில் சின்னதுரை உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனியில் உள்ள மாருதி கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன.
முதல் சுற்று முதலே அ.தி.மு.க. வேட்பாளர் ெஜய்சங்கரன் முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சின்னதுரை பின்தங்கியே இருந்தார். மொத்தம் 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெய்சங்கரன் 95 ஆயிரத்து 308 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சின்னதுரை 87 ஆயிரத்து 51 ஓட்டுகள் பெற்றார். இதன் மூலம் 8 ஆயிரத்து 257 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெய்சங்கரன் வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் துரை சான்றிதழை வழங்கினார். இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சின்னதம்பி வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்-2,54,635
பதிவானவை-2,00,069
செல்லாதவை-326
ஜெய்சங்கரன் (அ.தி.மு.க.)-95,308
சின்னதுரை (தி.மு.க.)-87,051
கிருஷ்ணவேணி (நாம்தமிழர் கட்சி)-10,233
சிவகுமார் (ச.ம.க.)-1,959
மாதேஸ்வரன் (அ.ம.மு.க.)-1,699
நோட்டா-1,834
இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 9 பேர் டெபாசிட் இழந்தனர்.
கெங்கவல்லி (தனி)
கெங்கவல்லி (தனி) தொகுதி அ.தி.மு.க. சார்பில் நல்லதம்பி, தி.மு.க. சார்பில் ரேகாபிரியதர்ஷினி, நாம் தமிழர் கட்சி சார்பில் வினோதினி உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் என்று தலைவாசல் அருகே உள்ள மாருதி கல்வி நிறுவனத்தில் எண்ணப்பட்டன. மொத்தம் 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி 89 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி 82 ஆயிரத்து 207 பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி 7 ஆயிரத்து 361 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதன் வழங்கினார்.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்-2,38,960
பதிவானவை-1,87,011
செல்லாதவை-508
நல்லதம்பி (அ.தி.மு.க.)-89,568
ரேகாபிரியதர்ஷினி (தி.மு.க.)-82,207
வினோதினி (நாம் தமிழர் கட்சி)-9,323
பாண்டியன் (அ.ம.மு.க.)-1,519
பெரியசாமி (ஐ.ஜே.கே.)-493
நோட்டா-1,251
இந்த தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 9 பேர் டெபாசிட் இழந்தனர்.
இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் அ.தி.மு.க.வை சேர்ந்த மருதமுத்து வெற்றி பெற்று இருந்தார். தற்போது ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளை அ.தி.மு.க. மீண்டும் தக்கவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு
ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு நடத்தினார்.
2. ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் பேனர்கள், சுவரொட்டிகள்-கொடிக்கம்பங்கள் அகற்றம்
ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் பேனர்கள், சுவரொட்டிகள்- கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
3. ஆக்கிரமிப்பை அகற்றகோரி ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
சித்தரேவு ஊராட்சி சங்காரெட்டிகோட்டை வடக்குத்தெருவில் உள்ள அங்கன்வாடி அருகே மர்ம நபர்கள் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாக கூறப்படுகிறது.
4. ஆத்தூர் அருகே, வயலில் மாடு மேய்ந்த தகராறில் விவசாயி கொலை:‘உன்னால் முடிந்ததை பார் என்றதால் வெட்டி கொன்றேன்’; கைதான விவசாயி வாக்குமூலம்
ஆத்தூர் அருகே வயலில் மாடு மேய்ந்த தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு விவசாயி கைது செய்யப்பட்டார்.