வாக்கு எண்ணும் மையத்தில் 3 போலீசார் உள்பட 5 பேருக்கு கொரோனா


வாக்கு எண்ணும் மையத்தில் 3 போலீசார் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2021 1:46 PM GMT (Updated: 3 May 2021 1:46 PM GMT)

வாக்கு எண்ணும் மையத்தில் 3 போலீசார் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி, 

புதுவையில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. புதுவை பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகியவற்றில் வைக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அரசு ஊழியர்கள், முகவர்கள், வேட்பாளர்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அவர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வந்தனர். மேலும் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. அவர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இருப்பினும் பரிசோதனை செய்யாமல், இருந்தால் அவர்களுக்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் நேற்று காலை 28 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 போலீசார் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் அங்கு தனிமை படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story