மாவட்ட செய்திகள்

தலைவர்களின் சிலைகள் திறப்பு + "||" + Opening of statues of leaders

தலைவர்களின் சிலைகள் திறப்பு

தலைவர்களின் சிலைகள் திறப்பு
தலைவர்களின் சிலைகள் திறப்பு
கோவை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணியால் சுற்றி மறைக்கப்பட்டன. 


அந்த வகையில் கோவை அவினாசி ரோடு அண்ணாசிலை சிக்னலில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை உள்பட பல்வேறு இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் துணியால் சுற்றி மூடி மறைக்கப்பட்டது.

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து கோவையில் துணியால் சுற்றி மறைக்கப்பட்டு இருந்த தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட்டன. 

கோவை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.