மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு + "||" + Awareness by the art group on corona prevention

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு
திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆலோசனையின்படி திருப்பத்தூர் நகர கடைவீதிகள், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மகளிர் திட்டத்தின் சார்பில் கலைக் குழுவின் மூலம் காளி வேடம் மற்றும் எமன் வேடமணிந்து, கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 அப்போது அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று பொதுமக்களுக்கு, கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உதவி திட்ட அலுவலர்கள் பழனி, உமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.