ஒரத்தநாடு தொகுதியில் 4-வது முறையாக வைத்திலிங்கம் வெற்றி தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனை 28 ஆயிரத்து 835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்


ஒரத்தநாடு தொகுதியில் 4-வது முறையாக வைத்திலிங்கம் வெற்றி தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனை 28 ஆயிரத்து 835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
x
தினத்தந்தி 3 May 2021 3:48 PM GMT (Updated: 3 May 2021 3:48 PM GMT)

ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனை 28 ஆயிரத்து 835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரத்தநாடு தொகுதி வாக்கு எண்ணிக்கை தஞ்சையிலுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மொத்தம் 26 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் இருந்து வந்தார்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் தலா 1000 வாக்குகள் தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக பெற்று வந்தார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் அவர் தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனை விட 28 ஆயிரத்து 835 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

4-வது முறையாக வெற்றி

ஒரத்தநாடு தொகுதியில் 5-வது முறையாக போட்டியிட்ட அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தற்போது 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே 2001, 2006, 2011 ஆகிய சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தற்போது அவர் மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரத்தநாடு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-

பதிவானது - 1,92,440

செல்லாதவை -300

வைத்திலிங்கம் (அ.தி.மு.க.) - 90,063

ராமச்சந்திரன் (தி.மு.க.) - 61,228

சேகர் (அ.ம.மு.க.) - 26,022

கந்தசாமி (நாம் தமிழர் கட்சி) - 9050

ரெங்கசாமி (மக்கள் நீதி மய்யம்) -721

மூக்கையன் (சுயே) -2041

ஸ்டாலின் (சுயே) -550

ஜெயசூரியன் (சுயே) -428

ரெங்கராஜ் (சுயே) -319

தன்ராஜ் (சுயே) -229

அருண்குமார் (சுயே) -223

பிரபாகரன் (சுயே) -99

நோட்டா -867

ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story