மூலைக்கரைப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு


மூலைக்கரைப்பட்டி அருகே  அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு
x
தினத்தந்தி 3 May 2021 3:56 PM GMT (Updated: 3 May 2021 3:56 PM GMT)

மூலைக்கரைப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது.

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையில், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி அருகே மயான கொட்டகை உள்ளது. அந்த பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் அங்கு சென்று, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story