மாவட்ட செய்திகள்

கலப்பு திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + hanging

கலப்பு திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கலப்பு  திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
பல்லடம்
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கலப்பு  திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
காதல் திருமணம்
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரன் காலனியில் வசிப்பவர் வரதராஜன் (வயது 27). இவரது மனைவி பவித்ரா (21). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு வயதில் ராஜ்குமார் என்ற குழந்தை உள்ளது. வரதராஜன் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 
இளம் பெண் தற்கொலை
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே, கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த  1-ந் தேதி இரவு மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை திட்டிவிட்டு வரதராஜன் வெளியே சென்றுள்ளார். கணவர் திட்டியதால் மனவேதனையில் இருந்த பவித்ரா, அங்கிருந்த வீட்டு கூரை கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய வரதராஜன், மனைவி தூக்குப் போட்டு தொங்குவதைக் கண்டு அலறி துடித்தார். பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 
ஆர்.டி.ஓ. விசாரணை
இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பவித்ராவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால் அவருடைய தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில், இறந்துபோன பவித்ராவின் கணவர் வரதராஜன், மற்றும் அவரது பெற்றோர், மாமனார் அழகிரிசாமி, உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிரேத பரிசோதனை முடித்து பவித்ரா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.