ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2021 5:22 PM GMT (Updated: 3 May 2021 5:22 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 519 பேர் குணமடைந்தனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 519 பேர் குணமடைந்தனர். 
477 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு 300-க்கும் குறைவாக இருந்து வந்தது. தற்போது இது கடுமையாக உயர்ந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
28 ஆயிரத்தை நெருங்குகிறது
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 519 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 374 ஆக உள்ளது. 
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை 242 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பலரையும் அச்சமடைய செய்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story