களம் கண்ட முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய லட்சுமணன்


களம் கண்ட முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய லட்சுமணன்
x
தினத்தந்தி 3 May 2021 5:27 PM GMT (Updated: 3 May 2021 5:27 PM GMT)

களம் கண்ட முதல் தேர்தலிலேயே விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் வெற்றி வாகை சூடினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் விழுப்புரம் சட்டசபை தொகுதியில் தான் அதிகபட்சமாக 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
விழுப்புரம் தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 68 பேர் உள்ள நிலையில்  2,01,726 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 76.97 ஆகும்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முன்தினம் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது. 27 சுற்றுகளாக எண்ணப்பட்ட இந்த வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

தி.மு.க. வேட்பாளர் வெற்றி 

முதல் சுற்றில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் முன்னிலை பெற்ற நிலையில் 2-ம் சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம் முன்னிலை பெற்றார். அதன் பின்னர் 3-வது சுற்றில் இருந்து 15-வது சுற்று வரை ஒவ்வொரு சுற்றுகளிலும் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். அதன் பிறகு நடந்த சுற்றுகளில் இடையிடையே சில சுற்றுகளில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம் சற்று முன்னிலை பெற்றபோதிலும் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன், தபால் வாக்குகளுடன் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 271 வாக்குகள் பெற்று 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம் 87,403 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

முதல் தேர்தலிலேயே... 

வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன், இதற்கு முன்பு அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி 18.8.2020 அன்று தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் சேர்ந்த சில மாதங்களில் அவருக்கு மாநில மருத்துவ அணி இணை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் முதல் முறையாக தற்போது சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டார். தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே அவர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
சுற்றுகள் வாரியாக முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
முதல் சுற்று
தி.மு.க.- 4,462
அ.தி.மு.க.- 4,250
நாம் தமிழர் கட்சி- 284
மக்கள் நீதி மய்யம்- 41
அ.ம.மு.க.- 96
நோட்டா- 27
2-வது சுற்று
தி.மு.க.- 3,588
அ.தி.மு.க.- 4,197
நாம் தமிழர் கட்சி- 204
மக்கள் நீதி மய்யம்- 28
அ.ம.மு.க.- 60
நோட்டா- 22
3-வது சுற்று
தி.மு.க.- 3,810
அ.தி.மு.க.- 3,803
நாம் தமிழர் கட்சி- 303
மக்கள் நீதி மய்யம்- 59
அ.ம.மு.க.- 67
நோட்டா- 36
4-வது சுற்று
தி.மு.க.- 4,515
அ.தி.மு.க.- 3,371
நாம் தமிழர் கட்சி- 287
மக்கள் நீதி மய்யம்- 193
அ.ம.மு.க.- 66
நோட்டா- 53
5-வது சுற்று
தி.மு.க.- 3,244
அ.தி.மு.க.- 2,686
நாம் தமிழர் கட்சி- 218
மக்கள் நீதி மய்யம்- 143
அ.ம.மு.க.- 39
நோட்டா- 49
6-வது சுற்று
தி.மு.க.- 3,354
அ.தி.மு.க.- 2,070
நாம் தமிழர் கட்சி- 329
மக்கள் நீதி மய்யம்- 266
அ.ம.மு.க.- 46
நோட்டா- 54
7-வது சுற்று
தி.மு.க.- 3,402
அ.தி.மு.க.- 2,547
நாம் தமிழர் கட்சி- 290
மக்கள் நீதி மய்யம்- 227
அ.ம.மு.க.- 92
நோட்டா- 49
8-வது சுற்று
தி.மு.க.- 3,887
அ.தி.மு.க.- 1,992
நாம் தமிழர் கட்சி- 182
மக்கள் நீதி மய்யம்-220
அ.ம.மு.க.- 49
நோட்டா- 37
9-வது சுற்று
தி.மு.க.- 3,989
அ.தி.மு.க.- 2,415
நாம் தமிழர் கட்சி- 275
மக்கள் நீதி மய்யம்-146
அ.ம.மு.க.- 80
நோட்டா- 31
10-வது சுற்று
தி.மு.க.- 4,622
அ.தி.மு.க.- 2,338
நாம் தமிழர் கட்சி- 184
மக்கள் நீதி மய்யம்-203
அ.ம.மு.க.- 22
நோட்டா- 40
11-வது சுற்று
தி.மு.க.- 3,464
அ.தி.மு.க.- 2,755
நாம் தமிழர் கட்சி- 243
மக்கள் நீதி மய்யம்-302
அ.ம.மு.க.- 40
நோட்டா- 57
12-வது சுற்று
தி.மு.க.- 3,716
அ.தி.மு.க.- 2,679
நாம் தமிழர் கட்சி- 284
மக்கள் நீதி மய்யம்-181
அ.ம.மு.க.- 60
நோட்டா- 50
13-வது சுற்று
தி.மு.க.- 3,514
அ.தி.மு.க.- 2,529
நாம் தமிழர் கட்சி- 237
மக்கள் நீதி மய்யம்-185
அ.ம.மு.க.- 66
நோட்டா- 45
14-வது சுற்று
தி.மு.க.- 3,910
அ.தி.மு.க.- 1,735
நாம் தமிழர் கட்சி- 264
மக்கள் நீதி மய்யம்-182
அ.ம.மு.க.- 25
நோட்டா- 35
15-வது சுற்று
தி.மு.க.- 3,404
அ.தி.மு.க.- 2,977
நாம் தமிழர் கட்சி- 234
மக்கள் நீதி மய்யம்-92
அ.ம.மு.க.- 25
நோட்டா- 37
16-வது சுற்று
தி.மு.க.- 3,299
அ.தி.மு.க.- 3,802
நாம் தமிழர் கட்சி- 268
மக்கள் நீதி மய்யம்-155
அ.ம.மு.க.- 56
நோட்டா- 44
17-வது சுற்று
தி.மு.க.- 3,700
அ.தி.மு.க.- 3,556
நாம் தமிழர் கட்சி- 189
மக்கள் நீதி மய்யம்-30
அ.ம.மு.க.- 75
நோட்டா- 17
18-வது சுற்று
தி.மு.க.- 3,529
அ.தி.மு.க.- 4,711
நாம் தமிழர் கட்சி- 164
மக்கள் நீதி மய்யம்-31
அ.ம.மு.க.- 57
நோட்டா- 20
19-வது சுற்று
தி.மு.க.- 3,431
அ.தி.மு.க.- 3,923
நாம் தமிழர் கட்சி- 215
மக்கள் நீதி மய்யம்-73
அ.ம.மு.க.- 95
நோட்டா- 25
20-வது சுற்று
தி.மு.க.- 3,722
அ.தி.மு.க.- 2,924
நாம் தமிழர் கட்சி- 174
மக்கள் நீதி மய்யம்-90
அ.ம.மு.க.- 41
நோட்டா- 35
21-வது சுற்று
தி.மு.க.- 3,846
அ.தி.மு.க.- 3,203
நாம் தமிழர் கட்சி- 246
மக்கள் நீதி மய்யம்- 29
அ.ம.மு.க.- 47
நோட்டா- 18
22-வது சுற்று
தி.மு.க.- 3,597
அ.தி.மு.க.- 5,491
நாம் தமிழர் கட்சி- 170
மக்கள் நீதி மய்யம்- 20
அ.ம.மு.க.- 47
நோட்டா- 22
23-வது சுற்று
தி.மு.க.- 4,311
அ.தி.மு.க.- 3,428
நாம் தமிழர் கட்சி- 252
மக்கள் நீதி மய்யம்- 73
அ.ம.மு.க.- 144
நோட்டா- 40
24-வது சுற்று
தி.மு.க.- 3,767
அ.தி.மு.க.- 3,478
நாம் தமிழர் கட்சி- 167
மக்கள் நீதி மய்யம்- 126
அ.ம.மு.க.- 81
நோட்டா- 39
25-வது சுற்று
தி.மு.க.- 4,208
அ.தி.மு.க.- 3,747
நாம் தமிழர் கட்சி- 207
மக்கள் நீதி மய்யம்- 28
அ.ம.மு.க.- 82
நோட்டா- 36
26-வது சுற்று
தி.மு.க.- 3,541
அ.தி.மு.க.- 3,915
நாம் தமிழர் கட்சி- 272
மக்கள் நீதி மய்யம்- 46
அ.ம.மு.க.- 94
நோட்டா- 24
27-வது சுற்று
தி.மு.க.- 2,075
அ.தி.மு.க.- 1,321
நாம் தமிழர் கட்சி- 158
மக்கள் நீதி மய்யம்- 30
அ.ம.மு.க.- 28
நோட்டா- 16

Next Story