மாவட்ட செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த 85 ஆயிரம் வாக்குகள் + "||" + We got 85 thousand votes for the Tamil Party

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த 85 ஆயிரம் வாக்குகள்

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த 85 ஆயிரம் வாக்குகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு 85 ஆயிரம் வாக்குகள் பெற்றது.
திண்டுக்கல்: 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர். 

இவர்களில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 120 பேர் வாக்களித்தனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. 

இதில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது. 

திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசம் ஆனது. பலம் வாய்ந்த கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்று 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 3-ம் இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்தது. 

அந்த கட்சிக்கு மொத்தம் 85 ஆயிரத்து 301 வாக்குகள் கிடைத்தது.


இதில் திண்டுக்கல் தொகுதியில் 14 ஆயிரத்து 860 வாக்குகளும், வேடசந்தூர் தொகுதியில் 8 ஆயிரத்து 495 வாக்குகளும், பழனி தொகுதியில் 7 ஆயிரத்து 563 வாக்குகளும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 4 ஆயிரத்து 944 வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது. 

அதேபோல் நத்தம் தொகுதியில் 14 ஆயிரத்து 762 வாக்குகளும், ஆத்தூர் தொகுதியில் 17 ஆயிரத்து 168 வாக்குகளும், நிலக்கோட்டை தொகுதியில் 17 ஆயிரத்து 509 வாக்குகளும் கிடைத்தது.


தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் நாம் தமிழர் கட்சிக்கு 7 சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட வாக்குகள் கிடைத்து பட்டியலில் 3-ம் இடம் பிடித்தது அந்த கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.