மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் 7 வுன் தங்கசங்கிலி பறிப்பு + "||" + Gold chain

பெண்ணிடம் 7 வுன் தங்கசங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 வுன் தங்கசங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 7 வுன் தங்கசங்கிலி பறிக்கப்பட்டது.
வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபட்டியை சேர்ந்தவர் முனியப்பன் மனைவி தேன்மொழி (வயது 55). இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அதில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று தேன்மொழியிடம் முகவரி விசாரிப்பது போல் பேச்சு கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்சங்கிலியை பறித்தார். பின்னர் அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.