மாவட்ட செய்திகள்

மானாமதுரையில் அ.தி.மு.க. தொடர் வெற்றியை தடுத்த தி.மு.க. + "||" + DMK to prevent victory

மானாமதுரையில் அ.தி.மு.க. தொடர் வெற்றியை தடுத்த தி.மு.க.

மானாமதுரையில் அ.தி.மு.க. தொடர் வெற்றியை தடுத்த தி.மு.க.
மானாமதுரையில் தி.மு.க. வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றதன் மூலம் அ.தி.மு.க. தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.. அந்த தொகுதியில் முதல் பெண் எம்.எல்.ஏ.வாக தமிழரசி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மானாமதுரை,,

மானாமதுரையில் தி.மு.க. வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றதன் மூலம் அ.தி.மு.க. தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.. அந்த தொகுதியில் முதல் பெண் எம்.எல்.ஏ.வாக தமிழரசி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. கோட்டை

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை மானாமதுரை (தனி) தொகுதி அ.தி.மு.க. கோட்டையாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அந்த தொகுதியை அ.தி.மு.க. தன்வசப்படுத்தி உள்ளது.அந்த தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக நாகராஜன் இருந்து வந்தார்.
தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நாகராஜன் களத்தில் இருந்தார்.. தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிட்டார்.இந்த தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இந்த தேர்தலில் 89 ஆயிரத்து 364 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் 75 ஆயிரத்து 273 வாக்குகளை பெற்று இருந்தார்.

வெற்றியை தடுத்த தி.மு.க.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.ம.மு.க. வேட்பாளர் மாரியப்பன் கென்னடி 10 ஆயிரத்து 231 வாக்குகள் பெற்று இருந்தார். அ.தி.மு.க.வேட்பாளர் நாகராஜனை விட 14 ஆயிரத்து 91 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றியை தி.மு.க. தன்வசப்படுத்தி கொண்டது.
 மானாமதுரை தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து அ.தி.மு.க. அதை கைப்பற்றி வந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதன் மூலம் மானாமதுரையில் அ.தி.மு.க. வின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.

முதல் பெண் எம்.எல்.ஏ.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள தமிழரசி தான் முதல் பெண் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை இந்த தொகுதியில் ஆண்கள் தான் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்து வந்தனர்.
முதல் பெண் எம்.எல்.ஏ.வான தமிழரசிக்கு தி.மு.க. நிர்வாகிகளும், பல்வேறு தரப்புகளை சேர்ந்தவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழரசிக்கு தேர்தல் அலுவலர் தனலெட்சுமி சான்றிதழ் வழங்கினார். அப்போது தி.மு.க மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.