மாவட்ட செய்திகள்

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு + "||" + Scythe cut for 2 people who knocked over alcoholics

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர்கள் செல்வகுமார் (வயது 43), சுரேஷ்குமார் (41). இவரது நண்பர் பரகத்துல்லா அறந்தாங்கியில் திருமண மண்டபம் வைத்துள்ளார். இவர், அறந்தாங்கி அவுலியாநகரில் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். அந்த கட்டிடத்தின் அருகே நேற்று அவுலியாநகரை சேர்ந்த சக்கரைமீரா உள்பட சிலர் மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர். இதைபார்த்த பரகத்துல்லா, இங்கு மது அருந்த வேண்டாம் என சொல்லி இங்கிருந்து போகச்சொல்லும்படி செல்வகுமாருக்கும், சுரேஷ்குமாருக்கும் பரகத்துல்லா போன் செய்து உள்ளார். இதையடுத்து 2 பேரும் அவுலியாநகருக்கு வந்து மது அருந்தியவர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது மது அருந்திய நபர்கள் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் செல்வகுமார், சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் தலை, கால், கை என பல இடங்களில் வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அருகே இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது
வாலிபரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு
மூலைக்கரைப்பட்டி அருகே 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
3. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
4. லாலாபேட்டை அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு
லாலாபேட்டை அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
5. வாலிபருக்கு அரிவாள் வெட்டு
சாயர்புரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.