மாவட்ட செய்திகள்

மது விற்ற 4 பேர் கைது + "||" + Arrested

மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது
சிவகாசி, சாத்தூரில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீசார் செங்கமலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு அனுமதியின்றி மதுவிற்ற காரனேசன் காலனியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ஜோதிராஜ் (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல் போலீசார் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு அனுமதியின்றி மதுவிற்பனை செய்த விக்னேஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
முழு ஊரடங்கின் போது சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கரநத்தம் பஸ் ஸ்டாப் அருேக வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த தங்கமாரியப்பன் (35) என்பவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

1. மதுபாட்டில்கள் விற்றவர் கைது
மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
2. மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது
தாயில்பட்டி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் ைகது செய்தனர்.
4. மது விற்ற 3 பேர் கைது
மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. 92 வயது மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது கள்ளக்காதல் ஜோடி
92 வயது மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது.