மாவட்ட செய்திகள்

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்நகரசபை ஆணையாளரிடம், தொழிலாளர்கள் மனு + "||" + Salon shops should be allowed to open

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்நகரசபை ஆணையாளரிடம், தொழிலாளர்கள் மனு

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்நகரசபை ஆணையாளரிடம், தொழிலாளர்கள் மனு
சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று நகரசபை ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் சவர தொழிலாளர் நலசங்க தலைவர் பெருமாள், செயலாளர் திருமலை, பொருளாளர் வயன பெருமாள், நெல்லை மாவட்ட மருத்துவ சமுதாய ஒருங்கிணைந்த செயலாளர் குணசேகரன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் விக்கிரமசிங்கபுரம் நகரசபை ஆணையாளர் காஞ்சனாவிடம் மனு கொடுத்தனர்.

அதில், விதிமுறைகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது தினமும் ½ நாளாவது கடையை திறக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் மாதம் ரூ.10 ஆயிரம் அரசு சார்பில் உதவி தொகை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.