மாவட்ட செய்திகள்

விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு + "||" + Young man killed in accident

விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு

விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு
விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பாலமுருகன் (வயது 22). இவர் கடந்த 1-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த பாலமுருகனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலமுருகன் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பாலமுருகனுக்கு தீபா என்ற மனைவியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு
கதண்டுகள் கடித்து மூதாட்டி இறந்தார்.
2. ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
உடையார்பாளையம் அருகே தோழிகளுடன் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
3. வாலிபர் திடீரென சாவு
வாலிபர் திடீரென இறந்தார்.
4. கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு
கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
5. மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
சின்னதாராபுரம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தபோது மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.