மாவட்ட செய்திகள்

வடமாநில தொழிலாளி பலி + "||" + accident

வடமாநில தொழிலாளி பலி

வடமாநில தொழிலாளி பலி
மங்கலம் அருகே லாரிமோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலியானார்.
மங்கலம்
மங்கலம் அருகே லாரிமோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வடமாநில தொழிலாளி
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன் வயது 22. இவர் கோவை மாவட்டம், சோமனூர் அருகே கிட்டாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
 இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து கிட்டாம்பாளையம் நோக்கி மோட்டார்சைக்கிளில் தனது நண்பரான குந்தன்மஹத்- என்பவருடன் சென்றார். மோட்டார்சைக்கிளை அர்ஜூன் ஓட்டினார். 
பலி
மங்கலத்தை அடுத்த பல்லவராயன்பாளையம் அருகே உள்ள எல்லைமேடு பகுதியில் உள்ள அபாயகரமான வளைவில் மோட்டார்சைக்கிள் சென்ற போது எதிரே வந்த லாரியும் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசார் அர்ஜூனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.