மாவட்ட செய்திகள்

மின்கம்பிகளில் தீப்பிடித்ததால் நோயாளிகள் ஓட்டம் + "||" + Patients flow due to fire in power lines

மின்கம்பிகளில் தீப்பிடித்ததால் நோயாளிகள் ஓட்டம்

மின்கம்பிகளில் தீப்பிடித்ததால் நோயாளிகள் ஓட்டம்
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி அருகே மின்கம்பிகளில் தீப்பிடித்ததால் நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.
கோத்தகிரி

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி அருகே மின்கம்பிகளில் தீப்பிடித்ததால் நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.

தீப்பிடித்தது

கோத்தகிரியில் பஸ் நிலையம் அருகில் அரசு  ஆஸ்பத்திரி உள்ளது. இதனை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் அமைந்து இருக்கின்றன. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று காலையில் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பகுதிக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்தது. அதில் உள்ள மின் கம்பிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 

மின் அழுத்த பிரச்சினை

இதை தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் மற்றும் சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்த வெளிநோயாளிகள் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மின்சாரத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. 

தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மேலும் மின்சாரத்துறையினர் தீயில் கருகிய மின்கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். மின் அழுத்த பிரச்சினை காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.