மாவட்ட செய்திகள்

மாமனாருக்கு கத்தியால் வெட்டுமருமகளுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + near aththur, cut with a kinfe to the fatherin law, web to daughter in law

மாமனாருக்கு கத்தியால் வெட்டுமருமகளுக்கு போலீசார் வலைவீச்சு

மாமனாருக்கு கத்தியால் வெட்டுமருமகளுக்கு போலீசார் வலைவீச்சு
ஆத்தூர் அருகே மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகளை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகளை போலீசார் தேடிவருகின்றனர்.
கணவன்,மனைவி பிரச்சினை
ஆத்தூர் அருகேயுள்ள முக்காணி மேலூர் சந்தனமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர்  மாரிமுத்து( வயது 63). இவரது மகன் மாரிச்செல்வம். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மாரி செல்வமும் ராணியும் சில காலமாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மாரிச்செல்வம் தூத்துக்குடியில் தனியார் வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்து வருகிறார். ராணி தனது பிள்ளைகளை வைத்துக்கொண்டு மாமனாருக்கு சொந்தமான  ஒரு வீட்டில் வசிக்கிறார.் மற்றொரு வீட்டில் மாமனார் வசித்து வருகிறார்.
மாமனாருக்கு கத்தி வெட்டு
 இருவருடைய வீட்டுக்கும் தனித்தனியே கழிவறை உள்ளது. இந்நிலையில் ராணி வீட்டார் பயன்படுத்தி வந்த கழிவறை பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ராணியின்  மகன் மாரிமுத்துவின் வீட்டுக்கு உள்ள கழிவறையைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் கழிவறையை சரியாக  துப்பரவு செய்யாததை,  தாத்தா மாரிமுத்து கண்டித்துள்ளார்.
மருமகளுக்கு வலைவீச்சு
 இதை பார்த்த ராணி,  மாரி முத்துவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அங்கு கிடந்த கம்பை எடுத்து மாரிமுத்துவை சரமாரியாக தாக்கியதோடு, வீட்டு முன்பு வாழை இலை அறுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில்  ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை வலைவீசி தேடி வருகின்றனர்.