மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில்முதியவர் மீது தாக்குதல்தொழிலாளி கைது + "||" + in kovilpatti, attack on olderman, worker arrested

கோவில்பட்டியில்முதியவர் மீது தாக்குதல்தொழிலாளி கைது

கோவில்பட்டியில்முதியவர் மீது தாக்குதல்தொழிலாளி கைது
கோவில்பட்டியில் முதியவரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகேயுள்ள வெங்கடாசலபுரம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (வயது 62). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பன்னீர் மேய்த்து வந்த ஆடு, இசக்கிமுத்து தோட்டத்திற்குள் சென்றதாம். இதை இசக்கிமுத்து கண்டித்தாராம். அதையடுத்து ஏற்பட்ட தகராறில் அவரை பன்னீர் அவதூறாகப் பேசி கம்பால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து, இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, முதியவரை தாக்கிய ஆடு மேய்க்கும் தொழிலாளி பன்னீரை (வயது 46) கைது செய்தனர்.