மாவட்ட செய்திகள்

நகை திருடிய பெயிண்டர் கைது + "||" + Painter arrested for stealing jewelry

நகை திருடிய பெயிண்டர் கைது

நகை திருடிய பெயிண்டர் கைது
நகை திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,மே.-
திருமங்கலம் நாகையாசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி நிறைமதி. தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் சுவர்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 11 பவுன் நகை மாயமாகி இருந்தது. 
இது குறித்து நிறைமதி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் வேலை பார்த்த பெயிண்டர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருமங்கலத்தைச் சேர்ந்த பெயிண்டர் புஷ்பராஜ் (வயது 48) என்பவர் நகை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் நகையை மீட்டனர்.