மாவட்ட செய்திகள்

பரமத்திவேலூரில் தேங்காய் விலை சரிவு + "||" + coconut rate reduced

பரமத்திவேலூரில் தேங்காய் விலை சரிவு

பரமத்திவேலூரில் தேங்காய் விலை சரிவு
பரமத்திவேலூரில் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது.
பரமத்திவேலூர்,

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவிலுள்ள பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. 

இந்த ஏலத்திற்கு பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற‌ ஏலத்திற்கு 4 ஆயிரத்து 794 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.34.30-க்கும், குறைந்தபட்சமாக கிலோ‌ ஒன்று ரூ.20-க்கும், ‌சராசரியாக கிலோ ‌ஒன்று ரூ.27-க்கும் ஏலம் போனது. 

மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 544-க்கு வர்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 1,843 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.33.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.27-க்கும், சராசரியாக ரூ.‌28.65-க்கும் ஏலம் போனது. 

மொத்தம் ரூ.54 ஆயிரத்து 892-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் ‌தென்னை‌ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்