பெண்ணின் கர்ப்பப்பையில் 7 கிலோ நீர்கட்டி அகற்றம்


பெண்ணின் கர்ப்பப்பையில் 7 கிலோ நீர்கட்டி அகற்றம்
x
பெண்ணின் கர்ப்பப்பையில் 7 கிலோ நீர்கட்டி அகற்றம்
தினத்தந்தி 4 May 2021 4:00 PM GMT (Updated: 4 May 2021 4:00 PM GMT)

பெண்ணின் கர்ப்பப்பையில் 7 கிலோ நீர்கட்டி அகற்றம்

மேட்டுப்பாளையம்


மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் அரசு  ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு காரமடை பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்தார். 

அவருக்கு மருத்துவ பரிசோதனைசெய்யப்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை, இ.சி.ஜி. ரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கர்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. 


இந்த நிலையில் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்கண்ணன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நீர்க்கட்டியை அகற்ற முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ் குமார் உதவியுடன் மகப்பேறு மருத்துவர்கள் டாக்டர்கள் ப்ரீத்தி, ஜனனி ஆகியோர் பெண்ணின் கர்ப்பப் பையில் அறுவை சிகிச்சை செய்து 7 கிலோ எடையுள்ள  நீர்க்கட்டியை அகற்றி சாதனை படைத்தனர்.

இந்த அறுவை சிகிச்சை காலை 9.30மணிக்கு தொடங்கிபகல் 12 மணிக்கு முடிவடைந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்தப் பெண் நலமாக உள்ளார். தொடர்ந்து மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
----


Next Story