மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் வைப்பு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் வைப்பு
x
தினத்தந்தி 4 May 2021 5:04 PM GMT (Updated: 4 May 2021 5:04 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கபட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கள்ளக்குறிச்சி  ஏ.கே.டி.பொறியியல் கல்லூரியில் நடந்தது. வாக்கு எண்ணிக்கை  முடிந்ததும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து  வாகனங்கள் மூலம் கள்ளக்குறிச்சி தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
 இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டார். 

பூட்டி சீல் வைப்பு

பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
 அப்போது கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், சங்கராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேல், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சக்திவேல், தனி தாசில்தார் (தேர்தல்) பாலசுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சியினர்பலர் உடன் இருந்தனர். 

Next Story