மாவட்ட செய்திகள்

4 சட்டசபை தொகுதிகளில் 58 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு + "||" + Deposit loss of 58 candidates in 4 assembly constituencies

4 சட்டசபை தொகுதிகளில் 58 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

4 சட்டசபை தொகுதிகளில் 58 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 58 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
கள்ளக்குறிச்சி, 

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 17 பேர், சங்கராபுரம் தொகுதியில் 19 பேர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் தலா 15 பேர் என மொத்தம் 66 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் இவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு 2-வது இடத்துக்கு வந்தவர்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்

அந்த வகையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் 2-வது இடத்தை பிடித்தார். இவர்களை தவிர தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, ஐ.ஜே.கே., பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 7 கட்சி வேட்பாளர்கள் மற்றும் 8 சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
அதேபோல் சங்கராபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் உதயசூரியன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு 2-வது இடத்தை பிடித்த பா.ம.க. வேட்பாளர் ராஜாவை தவிர நாம் தமிழர் கட்சி, ஓவைசி கட்சி, அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 7 கட்சி வேட்பாளர்கள் மற்றும் 10 சுயேச்சைகள் என மொத்தம் 17 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை

அதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சந்தோஷ் 2-ம் இடத்தை பிடித்தார். இவர்களை தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. உள்ளிட்ட 8 கட்சி வேட்பாளர்கள் மற்றும் 5 சுயேச்சைகள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு 2-வது இடத்தை பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை தவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 7 கட்சி வேட்பாளர்கள் மற்றும் 6 சுயேச்சைகள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். ஆக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட 66 வேட்பாளர்களில் 58 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :