மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு உடைகளுடன் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர் + "||" + dust

பாதுகாப்பு உடைகளுடன் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர்

பாதுகாப்பு உடைகளுடன் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர்
காங்கேயம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு உடைகளுடன் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர்.
காங்கேயம்
காங்கேயம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு உடைகளுடன் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர்.
கொரோனா 2-வது அலை
கொரோனாவின்2-ம் அலை தற்போது அதிகரித்து வருகிறது. சுகாதாரதுறை சார்பில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முககவசம் அணியவேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். காங்கேயம் பகுதியில் தற்போது கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
குப்பைகள் அகற்றம்
மேலும் கொரோனா தொற்று வீரியம் குறைவானவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டு காங்கேயம் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கேயம் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை, நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்தும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தியும், நகராட்சி வாகனத்தின் மூலம் மேற்கண்ட வீடுகளில் சுகாதாரமான முறையில் கிருமி நாசினி தெளித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். 
இப்பணியினை நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைபணி மேற்பார்வையாளர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.