மாவட்ட செய்திகள்

பஸ்கள் மோதல்; 12 பேர் காயம் + "||" + Buses collide; 12 people were injured

பஸ்கள் மோதல்; 12 பேர் காயம்

பஸ்கள் மோதல்; 12 பேர் காயம்
பஸ்கள் மோதல்; 12 பேர் காயம்.
காரியாபட்டி,

திருச்சுழியில் இருந்து கமுதி செல்லும் சாலையில் பச்சேரி குண்டாறுப் பாலம் அருகே தனியார் பஸ்சும், தனியார் மில் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் வந்த 4 பேர் மற்றும் தனியார் மில் பஸ்சில் வந்த 8 பேர் என மொத்தம் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாசிமக பெருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி தள்ளியதில் 10 பேர் காயம்
மாசிமக பெருவிழாவை முன்னிட்டு மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காளைகள் முட்டி தள்ளியதில் 10 பேர் காயமடைந்தனர்.
2. பஸ்-லாரி மோதல்: திருமண கோஷ்டியினர் 27 பேர் காயம் கெலமங்கலம் அருகே விபத்து
கெலமங்கலம் அருகே பஸ்-லாரி மோதிக் கொண்ட விபத்தில் திருமண கோஷ்டியினர் 27 பேர் காயம் அடைந்தனர்.