ராமநாதபுரத்தில் படிக்கட்டு என இறங்க நினைத்து மாடியில் இருந்து விழுந்தவர் சாவு


ராமநாதபுரத்தில் படிக்கட்டு என இறங்க நினைத்து  மாடியில் இருந்து விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 4 May 2021 7:02 PM GMT (Updated: 4 May 2021 7:02 PM GMT)

படிக்கட்டு என இறங்க நினைத்து மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி தலையில் அடிபட்டு இறந்தாா்.

ராமநாதபுரம்,

படிக்கட்டு என இறங்க நினைத்து மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி தலையில் அடிபட்டு இறந்தாா்.

மாடியில் படுத்திருந்தனர்

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா வெள்ளையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது55). இவரது மருமகன் கோவிந்தராஜ் (25). ெதாழிலாளர்கள்.
இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ராமநாதபுரம் அருகே பேராவூர் பொந்துகுழி மரம் அருகில் அறை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் காற்றுக்காக மொட்டை மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் லேசான மழை பெய்ததால் கோவிந்தராஜ் எழுந்து கீழே சென்று படுத்துள்ளார்.

சாவு

மதுபோதையில் இருந்த ஆறுமுகம் தூக்க கலக்கத்தில் எழுந்து மாடிப்படி என நினைத்து இறங்க முயன்ற போது மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு் ஆறுமுகம் இறந்து கிடந்தார்.
 ேநற்று காலை இந்த காட்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர

Related Tags :
Next Story