மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி + "||" + College student drowns in river

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
நெல்லை:

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் சந்தனகுமார் (வயது 19). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி சந்தனகுமார் உடலை மீட்டனர். அவரது உடலை சந்திப்பு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி மாணவர்- என்ஜினீயர் பலி
பவானிசாகர் அருகே நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கி மாணவர் மற்றும் என்ஜினீயர் இறந்தனர்.