மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு + "||" + Private company employee death

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்
கரூர்
கரூர் அருகே உள்ள ஆத்தூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 52). தனியார் நிறுவன ஊழியரான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மண்மங்கலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். கரூர்-சேலம் ரயில்வே பாலம் அருகே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மதியழகன் உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.