மாவட்ட செய்திகள்

அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட3 சலூன் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு + "||" + Manapparai municipal authorities sealed off 3 saloon shops which were operating in violation of government orders.

அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட3 சலூன் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட3 சலூன் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட 3 சலூன் கடைகளுக்கு மணப்பாறை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மணப்பாறை, 
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொற்றுள்ள நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில் மணப்பாறை பகுதியில் சில சலூன் கடைகள் செயல்படுவதாக நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முத்துவுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று பொத்தமேட்டுப்பட்டி மற்றும் கோவில்பட்டி சாலையில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது 3 சலூன் கடைகள் திறந்து இருந்தன. இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.