மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதள வசதி + "||" + Internet facility to know the results of corona test

கொரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதள வசதி

கொரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதள வசதி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதள வசதி ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றை கண்டறியும் நவீன ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா தடுப்பு முகாம்களில் பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படுவது வழக்கம்.  

பொதுவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், அதன் முடிவுகளை தெரிந்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தது. 

கொரோனா கிருமி தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்தால் அவரை சுகாதாரத்துறையினர் உடனே தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும், கிருமித் தொற்று இல்லை என்றால் அவருக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டு விடுவதும் நடைமுறையில் உள்ளது.

 இதனால் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

 இதனை தவிர்க்கும் வகையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் நவீன ஆய்வகத்தில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. 

பரிசோதனைக்கு சளி மாதிரிகளை கொடுத்த ஒருவர், இந்த இணையதளத்துக்குள் சென்று தனக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு இருப்பதையும், இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். 

மேலும் அதுகுறித்த தகவலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனே தெரிவிக்க வேண்டும்; சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உத்தரவு
ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
2. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை- கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
3. மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்; மராட்டிய அரசு உத்தரவு
மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து மராட்டியத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
4. பூத் முகவர்கள் உள்பட 450 பேருக்கு கொரோனா பரிசோதனை
திருப்பத்தூரில் பூத் முகவர்கள் உள்பட 450 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
5. ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை- அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்தது
ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.