மாவட்ட செய்திகள்

உடுமலை பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். + "||" + udumalai greenchilli

உடுமலை பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போடிப்பட்டி 
உடுமலை பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.காய்கறிகள் சாகுபடிஉடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
இங்கு விளையும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பேரிடர் சூழலில் அனைத்து தொழில்களும் பாதிப்பை சந்தித்து வருவது போல விவசாயத் தொழிலும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் வெளியூர் வியாபாரிகள் வருகை குறைவால் காய்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளது. அதேநேரத்தில் வரத்து அதிகரிக்கும்போது விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகள் தொடர்ந்து குறைந்த விலைக்கே வாங்கப்படுகிறது.இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் தொடர்ச்சியாக பச்சை மிளகாய்க்கு சீரான விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
குளிர்பதனக் கிடங்கு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-உடுமலை பகுதியைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டு முழுவதுமே காய்கறிகள் பயிரிடப்படுகிறது. எனவே போதிய விலை கிடைக்காத நிலையில் காய்கறிகளை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர்பதனக் கிடங்கு வசதி வேண்டும்.மேலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வகையிலான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நீண்ட நாட்களாக கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது.இதனால் அன்றன்று அறுவடை செய்யும் காய்கறிகளை அன்றே விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அத்துடன் தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்களை குறிப்பிட்ட நாளில் அறுவடை செய்யாவிட்டாலும் வீணாகி விடும்.ஆனால் மிளகாய் சாகுபடியைப் பொறுத்தவரை அறுவடைப் பருவத்தில் போதிய விலை கிடைக்காவிட்டால் காய்களைப் பழுக்க விட்டு மிளகாய் வற்றலாக விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியும்.
சீரான விலை
மேலும் விதை உற்பத்தியின் மூலமும் லாபம் ஈட்ட முடியும். தற்போதைய நெருக்கடியான நிலையிலும் கடந்த சில வாரங்களாக பச்சை மிளகாய்க்கு சீரான விலை கிடைத்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இதை மிகச்சிறந்த விலை என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசமான விலை என்று சொல்ல முடியாது என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.