டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.10¾ லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது


டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.10¾ லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 May 2021 9:49 PM GMT (Updated: 4 May 2021 9:49 PM GMT)

டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.10¾ லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை

டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.10¾ லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரூ.10¾ லட்சம் கொள்ளை

கோவை ஆர்.எஸ்.புரம் லாலிரோடு சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு கடந்த 23 மற்றும் 24-ந் தேதிகளில் வசூலான ரூ.10 லட்சத்து 72 ஆயிரத்து 279 தொகையை டாஸ்மாக் மதுக்கடையில் வைத்து கண்காணிப்பாளர் வேலுசாமி பூட்டிச்சென்றார். 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட வில்லை. அதை பயன்படுத்தி அந்த டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து  ரூ.10 லட்சத்து 72 ஆயிரத்து 279-ஐ கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

வாலிபர் கைது

இது குறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட் சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.

 இந்தநிலையில் டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் கொள்ளையடித்த சீரநாயக்கன்பாளையம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரின் மகன் குமார் என்ற சுதீஷ்குமாரை (வயது 29) போலீசார் நேற்று கைதுசெய்தனர். 

அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story