மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொைல + "||" + suicide

விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொைல

விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொைல
மொடக்குறிச்சி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார். 
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா இருளர் காலனியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி சின்னதாய். இவர்களுடைய மகள் அமராவதி (வயது 19). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேவா என்பவரை காதலித்து அமராவதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தார்கள். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அமராவதி மீண்டும் கர்ப்பமானார். 
கர்ப்பம் கலைந்தது
இதற்கிடையே தேவாவும், அமராவதியும் கடந்த மாதம் 25-ந் தேதி கரும்பு வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு வந்தார்கள். 
கடந்த 1-ந் தேதி  மொடக்குறிச்சி முத்தையன்வலசு நாவாங்காடுதோட்டத்தை சேர்ந்த துரைசாமி என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்தார்கள்
அப்போது அமராவதிக்கு கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு மனைவியை தேவா அழைத்துச்சென்றார்.
விஷம் குடித்தார்
மறுநாள் 2-ந் தேதி தேவா மட்டும் கரும்பு வெட்ட தோட்டத்துக்கு வந்துவிட்டார். சிறிது நேரத்தில் அமராவதியும் அங்கு வந்தார். கணவரின் அருகே வந்த அவர் வயிற்று வலி தாங்கமுடியாமல் விஷம் குடித்துவிட்டதாக கூறி மயங்கி விழுந்தார். 
உடனே அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தேவா அமராவதியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்ைச அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அமராவதி இறந்தார். 
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமராவதிக்கும், தேவாவுக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தீக்குளித்து புதுப்பெண் தற்கொலை
காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வெள்ளோடு அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை- ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை
வெள்ளோடு அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ராஜபாளையத்தில் ெரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
4. விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.